Wednesday, July 26

பாடல்  - காந்திமதி அம்மன் மேல்

பாடல்  - காந்திமதி அம்மன் மேல்

இறையவள் உமையே- என்
அம்மையவள் தாயே - உன்னருள்
வேண்டி நின்றேன் காத்தருள்வாயே!

சரணம் 1
பதம் வைத்தாடும் பஞ்சலோக நாயகி நீ..
நிதம் உனைப்பாட அருள்தரும் சக்தீ நீ
பூத்திடும் பூவெல்லாம் உன் திருவடிதனில் - நான்
பாடிடும் பாவெல்லாம் உன் மலர்க்கழல்களில்.

இறையவள் உமையே- என்
அம்மையவள் தாயே - உன்னருள்
வேண்டி நின்றேன் காத்தருள்வாயே!

சரணம் 2
வில்லேந்தும் திருக்கரம் எனைக்காக்கும் பொற்கரம்
சொல்வண்ணம் நிறையுடை சொக்கனின்  அகமுடை
ஆயிரங் கண்ணுடை  அன்னையின்  அருத்துணை
பா ஆயிரம் பாடிடும் அடியவர் வழித்துணை.

இறையவள் உமையே- என்
அம்மையவள் தாயே - உன்னருள்
வேண்டி நின்றேன் காத்தருள்வாயே!

No comments:

Post a Comment