Sunday, June 15

பயணம்


நம்மில் இருக்கும் நம்மை
நமக்கே காட்டும்..
நம்மில் தொலைந்த குழந்தையை
நம்மிடம் மீட்டுத்தரும்..

வரலாறு தெரிய வரும்
புவியியல் புரிந்து போகும்
மக்கள் பழக்கம் வரும்
சாப்பாடு ஒவ்வாமையும் வரும்....

பார்க்கும் இடங்களில்
உங்கள் சொந்தம் அந்நியமாகும்...
வேறு மனிதர் உறவாகும்...

பயணத்துக்கானஆயத்தம்
மலைப்பு
பயணம் முடிந்ததும் மனதில்
அலுப்பு.
இருந்தும்
கிடைக்கும் அனுபவமோ
களிப்பு...

அடுத்த பயணம்
இன்னும் ஒரு வருடம் கழித்துத்தான்
இருந்தாலும் மனதில் இப்போதே
கனவு ஆரம்பமாகும்....

இக் கவிதை
புதிய தேசம் செல்லும்
அத்தனை தோழியர்களுக்கும்!!!!

Wednesday, June 11

என் மரணம்:



என்றோ நிச்சயிக்கப்பட்டதுதான்,
நாளும் கிழமையும்  இரகசியமாய்,
எப்படி நிகழும் என்பதும்
 பரம ரகசியமாய்;
சில நாள் விழித்த பின்
அப்பாடா நிகழவில்லை என்றேன்,
பல நாள் விழித்த பின்இன்னுமா நிகழவில்லை என்கிறேன்;
எப்படியோ நிகழட்டும் என்று நினைக்கவும் தோணலை,
இப்படித்தான் நிகழ வேண்டும்
என்று சொல்லவும் தெரியலை,
நடந்த பிறகு பார்ககலாம் என்றால் அதற்கும் வழியில்லை;
நிகழட்டும் என்றோ எப்படியோ
என் மரணம்!