Monday, October 26

கோலப்பெண்


 பலகைமேல் அழகு கோலம்

ஒன்றல்ல இரண்டு கோலம்.

பச்சை வண்ணம் பளிச்சிட
சிவப்பு வண்ணம் சிதறிட
தாவணியில் ஒரு கோலம்.

ஐந்துபுள்ளி ஊடாக
ஒருபுள்ளி என முடிந்து
எழிலாக ஒரு கோலம்

நெற்றிச்சுட்டி காதுகுழை
கழுத்தணி மாலை
தொடிவளை
ஒறறைக்கல் மூக்குத்தி
பார்வையில் பட,
காலில் சிலம்பும்
இடையில் மேகலையும்
மறைந்திருக்க

தலைகலைந்து
தூக்கங்கலையாது
நைட்டிமங்கைகளைக் கண்ட கண்களே
அணிகளணிந்து கோலமிட்ட
அழகுமயிலை இங்கே காணீர்.

காணக்கிடையா கோலமிது.
கண்மூடாது காணீர்.