நாங்கள் ஓமனில் இருக்கிறோம். மிக அமைதியான நாடு. இன்னும் இரு தினங்களில் இந்தியா செல்வதாக இருக்கிறோம். பெட்டிகளை எல்லாம் மேலிருந்து இறக்க ஆரம்பித்தாகி விட்டது. இப்போது புயல் போல ஒரு சேதி! மஸ்கட்டைப் புயல் தாக்க இருக்கிறதாம்.
இன்று இரவு கடலில் தோன்றும் புயல் நாளை ‘சலாலா’ என்னும் ஓமனின் ஒரு நகரைத் தாக்கி விட்டு பின்பு நாளை மறுநாள் மஸ்கட்டில் கரையேறுமாம்! கடந்த 6 வருடமாக இருக்கிறோம். இதற்கு முன்பு புயல் வந்ததாக கேள்வி கூடப் பட்டதில்லை. சுனாமி வரும் போது கூட கொஞ்சம் பெரிய மழை, அவ்வளவுதான். மஸ்கட்டைப் பொறுத்தமட்டில் ஒரு பெரிய மழை பெய்தாலே ஊரெல்லாம் வெள்ளக் காடாகி விடும். இந்த முறை எப்படி என்றே தெரியவில்லை. எவ்வித பெரிய விரும்பத்தகாத நிகழ்வுகள் நடவாமல் இருந்தால் நல்லது. எல்லாம் வல்ல ஆண்டவனை நான் வேண்டிக் கொள்கிறேன். நீங்களும் தான். நாங்கள் நல்லபடியாக ஊருக்குச் சென்று வருகிறோ ம்! (2 மாதங்களுக்கு விடுமுறை. ஊரில் நேரமிருந்தால் பின்னூட்டமிட முயற்சிக்கிறேன்.)
நன்றி - http://www.wunderground.com/
8 comments:
புயல்ல எல்லாம் மாட்டாம பத்திரமா வந்து சேர பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும் :)
நன்றி பொன்ஸ்! இன்றிரவு(5-Jun) தன் புயல் வரும் என்கிறார்கள். ஆனல் இப்போது வரை எந்த அறிகுறியும் இல்லை. நாளை இரவு தான் எங்களுக்கு Flight.
பொன்ஸ்~~Poorna said...
புயல்ல எல்லாம் மாட்டாம பத்திரமா வந்து சேர பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும் :)
அதே !!
ஊரில் 2மாதத்தையும் ரொம்ப மகிழ்ச்சியா கொண்டாடவும் &
கொத்தனார் நடத்திய 'ரீபஸ்'ல கலக்கினதுக்கும் வாழ்த்துக்கள் :-)
ஊரில் நேரம் கிடைக்கும் போது பதிவுகள் எழுதவும்
கதிரவன், ரொம்ப நன்றி! இந்த நிமிடம் வரை ஒரு அறிகுறியும் இல்லை. இன்றிரவு 3 மணிக்கு மேல் தான் நிலவரம் தெரியவரும்.
நான் பல தடவை மஸ்கட் வந்துள்ளேன்!! அங்கு புயலா? ஆச்சரியமாக இருக்கிறதே. எல்லாம் ஒரு நாளில் சரியாகிவிடும். உங்கள் பயணம் நினைத்தது போல் நடக்கும்.
நல்ல படி ஊர் போய் வர வாழ்த்துக்கள்.
அப்படித்தான் நான் நினைச்சுக் கொண்டிருக்கிறேன். ஆனால் இங்கு எல்லாரும் கொஞ்சம் கலங்கித்தான் இருக்கிறார்கள்!
innumaa valla...:)
uurukku
Post a Comment