ஜனவரி 27, 2008 அன்று வெளியான ஜூவியில் "கட்டப்பட்ட காந்தியின் கண்கள்" என்ற தலைப்பில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக "PETA" கன்ற அமைப்பைச் சார்ந்த ஒரு வெளிநாட்டுப் பெண்மணி (இன்க்ரீட் நியூக்ரீக்) கோவையில் காவல்துறையின் கண்களை மறைத்து விட்டு காந்திஜியின் சிலையின் கண்களைக் கறுப்புத் துணியால் கட்டிவிட்டாராம்.
ஜல்லிக்கட்டினால் யாருக்கு ஆபத்து என்கிறார்கள்? மாடுகளுக்கா? இல்லை மனிதர்களுக்கா? மாடுகளுக்குத் தான் என்றால், எந்த மாடுகளுக்கும் உயிர்ச்சேதம் இருப்பது போல் எனக்குத் தெரியவில்லை. (தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) மனிதர்களுக்கு என்றால் ஜல்லிக்கட்டினால் மட்டும் தான் உயிர்ச்சேதம் ஏற்படுகிறதா? (என்னங்கடா டேய்?) வெள்ளைக்காரங்க மற்ற நாடுகளில் புகுந்து பண்ணுகின்ற அட்டூழியங்களுக்கு கறுப்புத் துணி கட்டவேண்டியதுதானே!
ஜல்லிக்கட்டு ஒரு வீர விளையாட்டு. அதற்கு வேண்டிய பாதுகாப்பைச் செய்து அதை ஒரு பெருமைக்குரிய விளையாட்டாக, விஷயமாக மாற்றாமல் ஜல்லிக்கட்டு என்றாலே கேவலமாக எண்ணவைத்து விட்டவர்களை நினைத்தால் எனக்குக் கோபம் வருகிறது? உங்களுக்கு?
ஜல்லிக்கட்டு ஒரு வீர விளையாட்டு. அதற்கு வேண்டிய பாதுகாப்பைச் செய்து அதை ஒரு பெருமைக்குரிய விளையாட்டாக, விஷயமாக மாற்றாமல் ஜல்லிக்கட்டு என்றாலே கேவலமாக எண்ணவைத்து விட்டவர்களை நினைத்தால் எனக்குக் கோபம் வருகிறது? உங்களுக்கு?
தடை
மஞ்சு விரட்டு
வழுக்கு மரம்
உறியடி எளவட்டக்கல்
அனைத்தும்
தடை செய்யப்பட்ட பின்
நாம் ஒருவருக்கொருவர்
ரக்ஷா கட்டிவிட்டு சாயம் பூசிக்கொண்டு
பேல்பூரி தின்றுகொண்டே மெஸேஜ் அனுப்பலாம்
மஞ்சு விரட்டு
வழுக்கு மரம்
உறியடி எளவட்டக்கல்
அனைத்தும்
தடை செய்யப்பட்ட பின்
நாம் ஒருவருக்கொருவர்
ரக்ஷா கட்டிவிட்டு சாயம் பூசிக்கொண்டு
பேல்பூரி தின்றுகொண்டே மெஸேஜ் அனுப்பலாம்
-செல்வேந்திரன் (நன்றி : ஆனந்தவிகடன் ஜனவரி 30, 2008)
(இந்த கவிதையைப் படிக்கும் போதும் இயல்பாய் எனக்குக் கோபம் வருகிறது, உங்களுக்கு?)
7 comments:
Testing...
கோவம் வரக் கூடாது ஆத்திரம் தான் வரனும்..
சொன்ன மாதிரி ரக்ஷா பந்தன் இன்று எல்லாக் கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் கொண்டாடப்படுகிறது..
பேல்ப் பூரி சிறு நகரங்களிலும் கிடைக்கிறது..
மஞ்சு விரட்டு, வழுக்கு மரம், உறியடி, இளவட்டக்கல் எல்லாம், எங்கே நடக்கிறது. அதில், நகரத்து இளைஞர்கள் பங்கெடுப்பதில்லை..
நமது விளையாட்டுக்களை, முறைப்படுத்தாவிட்டால், இளவட்டக் கல் மண்ணுக்குள் புதைந்தது போல், ஜல்லிக் கட்டும் புதையும்..
கோபம் +1
மெல்லத் தொலைந்து வரும் நம் அடையாளங்கள் பலவற்றுள் இதுவும் ஒன்று...புதிது புதிதாய் வரவேற்கையில் பழமையைத் தொலைத்துக் கட்டுவது நியாயமே இல்லை..
Why dont they GO TO SPAIN, MEXIO and other such countries to HELP those bulls first and come here?!!
Bunch of jobless bone-heads!!!
In tamil we call this "yERu thazhuvuthal" - do they even know what "thazhuvuthal" means?!! NO!!
In Spain and other countries they KILL THE BULL which loses!!! That's fine with them!!!
If there are concerns about public safety, treatment of bulls - that should be addressed but stopping it - the stupid court falls for it - is utter non-sense!!
என்னுடைய எண்ணம் போலவே சிந்தித்த TBCD, Jeeves,Apala மற்றும் பாசமலர், நன்றி!
சரியாகச் சொன்னீர்கள் . ஸ்பெயினில் நடப்பது போல் விளையாட்டு முடிந்தபின் மாடுகளை குத்தி கொள்வது இல்லை.
Post a Comment