Tuesday, March 13

அஞ்சல் செய்யாத கடிதம்

எல்லார் பார்வைக்கும் பாவையாய் தெரிந்த நீ
என் கண்களுக்கு மட்டும்
தேவதையாய் ஆனது எப்போது?

ஆயிரம் நாட்கள் நம்மைச் சேர்த்திருந்தாலும்
நமக்கான ஓர் நாள் மட்டும்
இல்லாமல் போனது ஏன்?

எனக்கும் உனக்கும் இடையே
எத்தனையோ வர்த்தைகள்.
அத்தனையிலும் ஓரு வார்த்தை கூட
என் மனதைச் சொல்லாமல் விட்டது ஏன்?

நான் பார்த்த கணங்களில்
உன் பார்வை என்னிடம் இல்லை
பின் எப்படித் தெரிந்தது
என் சட்டை அழுக்கு உனக்கு?

குழந்தை பிறக்கும் போது மட்டும்
தான்பனிக்குடம் உடையுமாம்.
உன்னைப் பார்க்கும் ஒவ்வோர் முறையும்
என்னுள் உடைந்தது எதுவோ?

மனைவியிடம் சொல்ல முடிந்த என்னால்
நம் காதல் பற்றி
உன்னிடம் சொல்ல முடியாமல் போனது ஏனோ?

சந்தன வாசமும் மல்லி வாசமும்
சொல்லும் உன் வரவை
உனக்கு முன்னால்
எனக்கு முன்னால்
என் வரவை நீ
எப்படிக் கண்டு கொண்டாய்?

உன் பின்னால் நான்
அமரும் போது மட்டும்
உன் கைக்குட்டை அடிக்கடி
தவறியது ஏனோ?
ஒவ்வோர் முறையும் பதிந்தது
உன் முகநிலவு பௌர்ணமியாய்!

எனக்கான கடைக்கண் பார்வையும்
இதழோரச் சிரிப்பும்
எப்போதும் உண்டு
என் நிறுத்தத்தில்
உன் பேருந்து நிற்கையில்!

கல்லூரிக் கடைநாளில்
உனக்கான என் தவம்
கலையாமலே போனது!
நீ என் கனவுகளைக் கலைத்து விட்டு
போருந்தின் சக்கதங்களுக்கு அடியில்.
அப்போதும் இருந்தது அப்படியே
எனக்கான கடைக்கண் பார்வையும்
இதழோரச் சிரிப்பும்!

எத்தனையோ கேள்விகளுக்கிடையில்
இன்னமும் தூங்குகிறது
பரணில் உறங்கும்
என் புத்தகங்களுக்கிடயே
முகவரியின்றி உன் பெயர் மட்டும்
முகப்பில் உள்ள கடிதம்,
உனக்கான என் கடிதம்

என் மனம் சொல்லும் கடிதம்

அஞ்சல் செய்யாத கடிதம்!

2 comments:

நந்தா said...

//எத்தனையோ கேள்விகளுக்கிடையில்
இன்னமும் தூங்குகிறது
பரணில் உறங்கும்
என் புத்தகங்களுக்கிடயே
முகவரியின்றி உன் பெயர் மட்டும்
முகப்பில் உள்ள கடிதம்,
உனக்கான என் கடிதம்//

வாவ். மிக அழகான கவிதை. காதலின் சோகத்தை மிக அழகாய் கொணர்ந்துள்ளீர்கள். இன்றும் பல ஆணின், பெண்ணின் மனதில் இது போன்ற அஞ்சல் செய்யாத ஒரு கடிதம் துருத்திக் கொண்டுதானிருக்கிறது.

இரா.கோகிலவாணி கார்த்திகேயன் said...

நன்றி நந்தா! இதுதான் என் முதல் கவிதை!

Post a Comment