Tuesday, March 13

கோழியும் மயிலும்

இல்லாத கொண்டையை
இருப்பதாக எண்ணிக் கொண்டு
தலையை ஆட்டி ஆட்டி
தத்தித் தத்தி வந்தது கோழி!

பாவமாய் தோட்டத்தில்
பத்தே இலைகளுடன்
குச்சியாய் நின்ற
ரோஜாச் செடியைக்

கொத்திக் கிளறிய கோழியை
கிளையில் படர்ந்திருந்த
தோகையை சிலுப்பிக்
கேட்டது மயில்,

‘பாவம், அந்த ரோஜா, தழைக்க விடேன்!’

ஆணவமாய் கோழியும்
‘முழுதாய் இருக்கிற எனக்கே
இல்லை உணவு,
அரைகுறை உயிர் பத்தி
எனக்கென்ன கவலை?’
என்று ஆர்ப்பரித்தது.

இளைப்பாற கூண்டு
வந்த கோழி
இட்ட முட்டைகளுக்கு
இதமாய் மேலமர்ந்தது.

பரபரவென வந்த மனிதன்
பட்டென இரு முட்டையைப்
பொ த்தி எடுத்தான்;
பரிதவித்தது கோழி!

மேலிருந்த மயில் சொன்னது
‘முழுதாய் இருக்கிற அவனுக்கே
இல்லை உணவு,
அரைகுறை உயிர் பத்தி
அவனுக்கென்ன கவலை?’

3 comments:

ஜெயஸ்ரீ said...

நீங்களே எழுதினதா ? நல்லா இருக்கு ரெண்டு குழந்தைக் கவிதையுமே.

எங்கே கடையை மூடீட்டு ரொம்ப நாளா காணாம போயிட்டீங்க ?

கதிரவன் said...

அட, குழந்தைகளுக்கான கவிதைகள் !! நல்லா இருக்குதுங்க கோகிலவாணி.

குழந்தைகளுக்காக எழுதுவோர் ரொம்ப குறைவு. நீங்க இன்னும் அதிகம் எழுதுவீங்கன்னு நினைக்கிறேன்.
வாழ்த்துக்கள் !!

இரா.கோகிலவாணி கார்த்திகேயன் said...

நன்றி! ஜெயஸ்ரீ & கதிரவன்! கவிதையே எனக்கு புதிது!
என் பொண்ணுக்கு சொன்ன கதை கவிதையாகி விட்டது! அவ்வளவே!

Post a Comment