Tuesday, March 13

அறிமுகம்

எனக்கு சிறு வயதிலிருந்தே கதை, கவிதை, கட்டுரை எல்லாம் எழுத ரொம்ப ஆசை. ஆனால் அதற்கான முயற்சி பண்ணியதே இல்லை. எல்லாரும் மிக அழகாக கதை எழுதிக் கொண்டு இருக்கும் போது, நான் மட்டும் "எப்படித்தான் இவர்களால் இந்தளவு கற்பனை பண்ண முடியுதோ?" என்று யோசித்துக கொண்டிருப்பேன். இப்போதும் அப்படித்தான். ரொம்ப யோசித்து யோசித்துக் கடைசியில் என்னைப் பற்றிய அறிமுகத்துடன் ஆரம்பிக்கிறேன்.

நமக்குத் தாய்மண் என்றால் அது நெல்லைச்சீமைதான்! இப்போது வாசம் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஓமன்! இப்போதைக்கு வீட்டு நிர்வாகம் மட்டும் என் கையில். மற்றபடி எல்லாவற்றிலும் கை வைத்துவிடுவேன். எல்லாவற்றையும் 5% ஆவது தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று பெரிய ஆசை! பளிச்சுன்னு சொன்னா நான் ஒரு நல்ல அரைகுறை! நிறைய படிப்பேன். மிகவும் தேர்ந்தெடுத்து உருப்படியான விஷயங்களைப் படிப்பேன் என்று நீங்கள் நினைத்தால் Sorry! ரொம்ப தப்பு. படிக்கிறதுக்கு அ,ஆ புத்தகம் கிடைத்தால் கூட 10 நிமிடம் உட்கார்ந்து படிப்பேன்!

வாழ்க்கை நமக்கு தினமும் ஏதாவது ஒன்றைக் கற்றுக் கொடுத்துக் கொண்டு தான் இருக்கின்றது. ஆனால் அது என்ன கற்றுக் கொடுத்திருக்கிறது என்பதை கற்றுக் கொள்ளாமலேயே பல பேரின் வாழ்க்கை முடிந்து விடுகின்றது. எனக்கு கற்றுக் கொடுத்ததெல்லாம் ‘விட்டுக் கொடு’ என்பது மட்டுமே! நான் விட்டுக் கொடுக்காத சமயங்களில் இழப்பு இரு பக்கத்திலுமே! நான் விட்டுக் கொடுத்து விட்டால் இழப்பு ஒரு பக்கத்தில் மட்டும்! என்னைப் பொறுத்தவரை வாழ்க்கை நமக்கு மட்டுமல்லாது நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அங்ஙாறு அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க நாம் கொடுக்க வேண்டிய வுலை நமது பொறுமை மட்டுமே! உங்கள் கோபத்தைப் புரிந்து கொள்பவர்களிடம் மட்டுமே உங்கள் கோபம் செல்லுபடியாகும். மற்றவர்களிடம் விழலுககு் இறைத்த நீர் தான்!

எனக்கும் என் கணவருக்குமான உடன் படிக்கையே இதுதான். இருவரில் ஒருவர் கோபப்ப்டும் போது மற்றவருக்கு சூடு சொரணை என்பது இருக்கவே கூடாது. அதேபோல தவறு செய்பவர் இறங்கி வரும்போது மற்றவர் உடனே அவரை மன்னித்துத் தவறினை மறந்து விட வேண்டும்! அதை விடுத்து இறங்கி வருபவர் மீது எகிறினால் யுத்தம் மீண்டுிம் ஆரம்பம்.

இது கணவன், மனைவி உறவுக்கு மட்டுமல்ல, எல்லா உறவுகளுக்கும்செல்லும்! ஆனால் கணவன், மனைவி உறவுக்குஇந்த மனப்பான்மை மிகவும் முக்கியம். ஏனெனில் அது குடும்பத்திற்கே வேட்டு வைத்து விடும்.

என்னடா இது ஒரே அட்வைஸ் மழை என்று எண்ணாதீர்கள். பின்னே என் மனதில் பொங்கிப் பெருக்கெடுத்து ஓடும் தத்துவங்களை நான் யாரிடம் கொட்டுவதாம்?


மாதம் ஒரு பதிவாவது இட வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி இருக்கிறேன். நீங்களும் வேண்டிக் கொள்ளுங்களேன்! Please!

17 comments:

குட்டிபிசாசு said...

நன்றாக எழுதுவீர்கள் போல...உங்கள் அறிமுகமே சொல்கிறது!! வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுத!!

பாலராஜன்கீதா said...

தமிழ் வலைஉலகத்திற்கு நல்வரவு. வாழ்த்துகள்.

இரா.கோகிலவாணி கார்த்திகேயன் said...

நன்றி! (கு.பி) & கீதா!
என் தங்கையோட பட்டப்பெயர்களில் குட்டிப்பிசாசு - வும் ஒன்று! வீடெங்கும் எல்லாருடைய பட்டப் பெயர்களை மாற்றி மாற்றி எழுதி வைப்போம்!

பாலராஜன் கீதா, எப்படிங்க இப்படி யோசிக்கிறீங்க? நீங்க 8 - வது கேள்விக்கு பதில் சொன்னவுடனேயே உங்களுக்குது தான் பரிசு என்று முடிவு செய்து விட்டேன்!
வாழ்த்துகள்!

பாலராஜன்கீதா said...

நன்றி

காயத்ரி சித்தார்த் said...

//வாழ்க்கை நமக்கு தினமும் ஏதாவது ஒன்றைக் கற்றுக் கொடுத்துக் கொண்டு தான் இருக்கின்றது. ஆனால் அது என்ன கற்றுக் கொடுத்திருக்கிறது என்பதை கற்றுக் கொள்ளாமலேயே பல பேரின் வாழ்க்கை முடிந்து விடுகின்றது.//

யப்பா! அசத்தியிருக்கீங்க! இப்ப தான் வரேன் உங்க பதிவுக்கு. அட்டா லேட் பண்ணிட்டமேன்னு ஃபீல் பண்ண வெச்சிட்டீங்க.

இரா.கோகிலவாணி கார்த்திகேயன் said...

நன்றி காயத்ரி!

கீர்த்தனா said...

உங்களது எழுத்து நடை மற்றும் "அட்வைஸ்" இரண்டையும் பார்க்கும் போது எனது அம்மாவின் சாயல் தெரிகிறது.
அதுவே பெரிய ஈர்ப்பாய் போய்விட்டது.
வாழ்த்துக்கள்.:-)
தொடர்ந்து எழுதுங்கள்.
கட்டாயம் உங்களை பாராட்டியே ஆக வேண்டும். கல்யாணம் பண்ணிக்கொண்டால் குடும்பம் பிள்ளை குட்டி என்று நினைத்துக்கொண்டு ஒதுங்கி விடாமல் எழுத அதுவும் புதிதாய் வந்து இருக்கிறீர்கள்.
பாராட்டுக்கள் நிறைய எழுதுங்கள்.

இரா.கோகிலவாணி கார்த்திகேயன் said...

மிகவும் நன்றி கீர்த்தனா!
அட்வைஸ் என்றில்லை, இதுதான் உண்மை. ஆனால் நம்மால தான் கடைப்பிடிக்க முடிவதில்லை.

A. kalidasan said...

நீங்கள் உங்களை அறிமுகம் லட்டரில் எழுதியிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி தருகிறது. இன்றையகாலத்தில் அதுவும் வெளிநாடுகளில் இருப்போர் இப்படி ஆர்வப்பட்டு தமிழில் ஏழுதுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடரட்டும் உங்கள் எழுத்துக்கள்.

இரா.கோகிலவாணி கார்த்திகேயன் said...

நன்றி காளிதாஸ்! கடந்த 6,7 வருடம் தான் வெளிநாட்டு வாசம். அதற்கு முன் 100% நெல்லைத் தமிழச்சி!

A. kalidasan said...

எனக்கும் திருநெல்வேலிதான்

நந்தா said...

உங்களது எழுத்துக்களைப் பார்த்தால் புதியவரைப் போன்றே தோண வில்லை. வலையுலகத்திற்கு நல்வரவு.

நானானி said...

good wishes to nellai tamilaachi from another nellai tamilaachi!
inertesting post.( i am out of station, thereis no tamil fond in this computer, kindly bear with me.)sometimes as you said i also keep calm without 've.ma.su so.'got it? which makes the life train go smooth on the track!!

இரா.கோகிலவாணி கார்த்திகேயன் said...

ரொம்ப நன்றி நானானி! உங்கள் பெயர்க்காரணம் என்ன?

வெ,மா,சூ,சொ இல்லாம இருந்தால் நிஜமாகவே பிரச்னை வரப்போவதில்லை, ஆனால் நம்மால் எல்லா நேரங்களிலும் அது முடிவதில்லையே!

துளசி கோபால் said...

வா(ங்க)ம்மா கோகிலவாணி.

ஜோதியில் வந்து கலந்துக்கிட்டதுக்கு மனமார்ந்த வாழ்த்து(க்)கள்.
ஆரம்பம் ஜோரா இருக்கு.

திருநெல்வேலி கார்த்திக் said...

உங்கள் கூற்று 100 க்குக் 100 உண்மை

இப்படி எல்லோரும் இருந்து விட்டால்
உறவுகளிலில் அன்பும் ,பண்பும் பாதுகாப்பும்,பரஸ்பர நல்லுனர்வும்,விட்டுக் கொடுத்து ஏற்றுக் கொள்ளும் நற்குணமும் மலர்ந்து மனம் பரப்பினால், அங்கே போட்டியில்லை,பொறாமை இல்லை,
கெடுதல் இல்லை


அது தான் பூலோக சுவர்க்கம்

விட்டுக் கொடுத்தவன் கெட்டுப் போவதில்லை

எனும் சான்றோர் வாக்கு பொய்க்குமோ

தங்கள் வரவு நல்வரவாகுக.

இரா.கோகிலவாணி கார்த்திகேயன் said...

ஆனால் எல்லா நேரங்களிலும் நம்மால் இப்படி இருக்க முடியாது என்பதுதானே பிரச்னை!

Post a Comment