சிவப்புவண்ணச்
சேலைக்காரி
சலங்கை
கட்டிய பாதக்காரி
பச்சைவண்ண
வளவிக்காரி
பாதந்தூக்கும்
கரகக்காரி
சுத்திசுத்தி
ஆடுவாள்.
சுழன்றுசுழன்று
ஆடுவாள்.
கச்சிதமாய்
தாளையே
கண்ணிலெடுத்து
ஆட்டுவாள்.
சேலைகட்டிக்
காட்டுவாள்
ஏணிஏறிக்
காட்டுவாள்
தலையிலுள்ள
கரகமும்
தரைவிழாது
ஆடுவாள்
எத்தனைதான்
வித்தைகள்
அத்தனையும்
காட்டியும்
கூட்டமது
மயங்காது
கொட்டியும்
கொடுக்காது
உடல்காட்டி
ஆடிடும்
உச்சகட்ட
நடிகைக்கு
கோடிதரும்
மக்களே
கொஞ்சம்நின்னு
கேளுங்க
முடிகிடி
வெட்டவும்
முட்டைஒண்ணு
வாங்கவும்
படியரிசி
வாங்கவும்
படிப்புச்செலவு
பார்க்கவும்
கூட்டுக்கறி
வைக்கவும்
வீட்டுவாடகை
கொடுக்கவும்
கைதொழுது
நிற்கிறாள்
காசுதந்து
போங்களேன்!!
No comments:
Post a Comment