என்னை நானாக உணரச்செய்யும்
தருணங்களில்
ரயில்பயணமும் ஒன்று.
நீலக்கடல்சூழ்
கூப்ரா கடற்கரையும் ஒன்று.
நீண்டு
நெளிந்தோடும் ஆறு போல்
இரைச்சலோடு
ஓடும் தொடரி.
இரவு
வெக்கையில் சென்னையிலிருந்து கிளம்பி
இனிய
வைகறையில் மதுரையைக் கடக்கும்போது
இதுவல்லவோ
இன்பம் என்று மெய்மறப்பேன்
இன்னும்
கயத்தாறு வரும்போது காற்றலைகள்...
கண்மூடி
மயங்கி இருக்கும் போது
வடைகாபி, பூரிக்கிழங்கு போளியின் குரல்.
வாழ்வே
இதற்குத்தானே என்று
வருவதை
எல்லாம் வாங்கி வைப்பேன்.
நெல்லை
வந்தாச்சு என்பதை நிலம்
சொல்லும்
போது வரும் ஆனந்தம்..
இனிய
தொடரியின் பயணத்திற்கு
இனிதே
காத்திருக்கிறேன் .
No comments:
Post a Comment