அன்புக்கு தாயைச் சொல்வர்.அருளுக்கு இறையைச் சொல்வர்.
ஆசிரியர் இரண்டுமானவர்.
அன்பும் அருளுமாய் வேண்டியவர்
பற்றின்பின் செல்லுதல் ஏற்பதற்கல்ல.
ஒரு மாணவர் நன்மைக்காய்
பிற மாணவர்நயன் கெடுத்தல்
அறமல்ல என்பேன் யான்.
பற்று வைத்தவர் அருமையென்பார்.
பற்றப்பட்டவர் மகிழ்வாவார்.
புறந்தள்ளப்பட்டவரோ மடமை ஆவார்.
ஆசிரியர் அன்னையென்றால்
அன்பாய் இருத்தலும்
எழுத்தறிவித்தவர் இறையென்றால்
அருளாய் இருந்தலுமே
அறமாகும் கல்விப்பணிக்கு..
இதுவே எம் கருத்து.
No comments:
Post a Comment